நயன்தாராவின் கோலமாவு கோகிலா ஆகஸ்ட் 10ல் ரிலீஸ்

சென்னை: நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கோலமாவு கோகிலா’ஆகஸ்ட் 10-ஆம் நாள் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்!

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். இவருடன் யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், அறந்தாங்கி நிஷா, தொலைக்காட்சி பிரபலம் ஜேக்குலின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகவுள்ளது. இப்படத்திற்கும் அனிருத் இசையமைத்துள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது.

இப்படத்தில் இடம்பெறும் “எதுவரையோ” என்னும் பாடலினை படக்குழுவினர் வெளியிட்டனர். பின்னர் இப்படத்தின் இரண்டவாது பாடலான “கல்யாண வயசு” எனும் பாடலினை கடந்த மே 17-ம் நாள் படக்குழுவினர் வெளியிட்டனர். இந்த இருப்பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது. இப்படத்தின் மூன்றாவது பாடலான “ஒரே ஒரு” எனும் பாடல் கடந்த கடந்த ஜூன் 14-ம் தேதி வெளியாகி தற்போது வரை லட்சக்கணக்கான பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.

இப்படத்தின் மூலம் சிவகார்த்திகேயன் பாடலாசிரியராக அறிமுகமாகியுள்ளார். விக்னேஷ் சிவன் பாடகராக அவதாரம் எடுத்துள்ளார். இதனால் ரசிகர்களுக்கு இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ட்ரைலரினை படக்குழுவினர் கடந்த ஜூலை 5-ஆம் நாள் வெளியிட்டனர். இந்த ட்ரெய்லரை யூடியூபில் சுமார் 30 லட்சத்துக்கும் அதிகமானோர் இதுவரை பார்த்துள்ளனர்.

இந்நிலையில் படத்தின் ட்ரெய்லரை பார்த்த சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். நயன்தாராவின் கிரீடத்தில் மேலும் ஒரு வைரக்கல்லாக இப்படம் இருக்கும் என புகழ்ந்துள்ளார். இந்நிலையில் தற்போது இப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் நாள் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here