யோகி பாபுவின் கன்னத்தை கிள்ளும் விஜய் – வைரலாகும் வீடியோ!

சென்னை: சர்கார் படத்தில் நடிக்கும் யோகி பாபுவின் கன்னத்தை கிள்ளி கியூட் சொல்லும் வீடியோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் திரைப்படம் சர்கார் படத்தில் முதல்கட்டப் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ‘சர்கார்’. இதன் முதல்கட்டப் படப்பிடிப்பு தீவிரமாகும் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். அரசியல் தலைவர்களாக ராதாரவி மற்றும் பழ.கருப்பையா நடிக்கின்றனர். வரலட்சுமி, யோகி பாபு, பிரேம் குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதபாத்திரங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். படம் தீபாவளிக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

சர்கார் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் துவங்கி நடந்து வருகிறது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஈ.வி.பி. பிலிம்சிட்டியில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து அங்கு முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

இப்படத்தில் நடித்து வரும் வரலட்சுமி, படப்பிடிப்பு தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதில் மறைமுகமாக ஏதேனும் ஒரு விஷயத்தை குறிப்பிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்த நிலையில், படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் யோகி பாபுவின் வீடியோ ஒன்றை நடிகை வரலட்சுமி அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் யோகி பாபு பெண் வேடத்திலும், அவரது கன்னத்தை ஒருவர் கிள்ளுவது போன்றும் அந்த வீடியோ முடிகிறது. யோகி பாபுவை கிள்ளும் அந்த நபர் யார் என்று கண்டுபிடிங்கள் என்று அந்த பதிவில் வரலட்சுமி தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சர்கார் படத்தில் யோகி பாபு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ உடன், மீண்டும் சர்கார் படப்பிடிப்பு தளத்திற்கு வந்துள்ளேன். இது யாருடைய கை என்று கண்டுபிடியுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இது சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இது தளபதி விஜய்யின் கை தான் என்று அனைவரும் கணித்துள்ளார்கள்.
வீடியோவை பல்லாயிரக்கணக்கானோர் ரசித்துள்ளனர்.

கடந்த மாதம் விஜய் பிறந்தநாளையொட்டி வெளியான சர்க்கார் படத்தின் போஸ்டர் பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. போஸ்டரில் விஜய் புகைப்பிடிப்பது போன்று இருப்பதற்கு சில கட்சிகள் மற்றும் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறையும் விஜய் மற்றும் முருகதாஸுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதனைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் இருந்து சம்பந்தப்பட்ட போஸ்டரை நீக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here