கடைக்குட்டி சிங்கம் படத்தை பாராட்டிய துணை ஜனாதிபதி

சென்னை: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, கடைக்குட்டி சிங்கம் படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளதால் படக்குழுவனர் மிக மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த வாரம் உலகம் முழுவதும் வெளியான படம் கடைக்குட்டி சிங்கம். பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் எடுக்கப்பட்டுள்ள இப்படம், விவசாயத்தையும், குடும்ப உறவுகளின் பெருமைகளையும் பேசும் விதமாக அமைந்துள்ளது.

சத்யராஜ், சாயிஷா சைகல், பிரியா பவானி சங்கர், அர்த்னா பினு உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் கடைக்குட்டி சிங்கம். இந்த படம் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இப்படத்திற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து பாராட்டுக்களும் குவிந்தவண்ணம் உள்ளன.

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. முதல் முறையாக கார்த்தி, சூர்யா கூட்டணியில் வந்த இப்படத்திற்கு கார்த்தி சூர்யாவே இயக்குனர்களாக இருந்துள்ளார்கள் என்று ஒரு பக்கம் கூறுகிறார்கள்.

இந்த நிலையில், இப்படத்திற்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்துள்ளதால் மகிழ்ச்சியில் அப்படக்குழுவினர் உள்ளனர். குடும்ப கதையையும், விவசாயத்தையும் மையப்படுத்தியே இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ள இப்படம் வசூலில் மட்டும் கொஞ்சம் பின் தங்கியுள்ளது. சென்னை பாக்ஸ் ஆபிஸில் கடைக்குட்டி சிங்கம் ரூ.1.49 கோடி வசூல் படைத்துள்ளது.

இந்நிலையில் தற்போது இப்படத்தை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக துணை ஜனாதிபதி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘ சமீபத்தில் தெலுங்கு மொழியில் வெளியான “சின்னபாபு” (தமிழில் “கடைக்குட்டி சிங்கம்”) திரைப்படத்தைப் பார்த்தேன். கிராமத்து பசுமை பின்னணியில், நம் பழக்க வழக்கங்களை, மரபுகளை மற்றும் வாழ்க்கை முறையை, ஆபாசம் இல்லாமல் காட்டிய சுவாரசியமான நல்ல படம்.’ என அதில் குறிப்பிட்டுள்ளார்.

துணை ஜனாதிபதியின் பாராட்டினால் படக்குழுவினர் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளனர். வெங்கையா நாயுடுவின் பாராட்டிற்கு படத்தின் தயாரிப்பாளர் நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here