Connect with us

Cinema

சிவகாத்திகேயன் புதுகெட்அப்… பாராட்டிய அனிருத் – ரசிகர்கள் உற்சாகம்

Published

on

சென்னை ; டாப் ஹீரோக்களில் ஒருவரான சிவா தற்போது தனது புதிய புகைப்படத்தை டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவருடைய ரசிகர்கள் மிக ஆனந்தத்தில் உள்ளார்கள்.

தமிழ்த் திரையுலகத்தில் தற்போதைய முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். ‘சீமராஜா’ படத்தில் நடித்து முடித்துள்ள சிவகார்த்திகேயன் அந்த படம் செப்டம்பர் 13ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் கூறியுள்ளார்கள்.

அடுத்து ரவிகுமார் இயக்கத்தில் பெயரிடப்படாத புதிய படத்தில் நடித்து வருகிறார். ரகுல் ப்ரீத் சிங் நடிக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

தற்போது ஒரு புதிய தோற்றத்திற்கு தன்னை மாற்றிக் கொண்டுள்ள சிவகார்த்திகேயன் அந்த தோற்றப் புகைப்படத்தை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். சயின்ஸ் ஃபிக்‌ஷன் ஜானரில் தயாராகும் இந்தப் படத்திற்கான சிவகார்த்திகேயனின் தோற்றம் எப்படி இருக்கும் என அவரது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவிவந்தது. சிவகார்த்திகேயன் மெரினா படத்தில் அறிமுகமானதில் இருந்து ஒவ்வொரு படத்திலும் தனது தோற்றத்தையும் நடிப்பையும் மெருகேற்றிக்கொண்டே வருகிறார்.

அதனால் அவரது படங்களுக்கான ஓப்பனிங் மற்றும் அவருக்கான ரசிகர்கள் கூட்டம் அதிகரிப்பது சாத்தியமாகிறது. கொஞ்சம் வளர்ந்த முடியுடன், தாடி மீசையுடன் புதிய கெட்அப்பில் இருக்கும் அந்தப் புகைப்படம் கருப்பு வெள்ளை புகைப்படமாக இருப்பதால் இன்னும் வித்தியாசமாக இருக்கிறது.

அந்த புகைப்படத்தை டிவிட்டரில் சிவகார்த்திகேயன் வெளியிட்டதுமே, இசையமைப்பாளர் அனிருத், “இந்த கெட்-அப்புல ஒரு படம் பண்ணுவோமா, தீம் மியூசிக் ரெடி” என பதில் சொல்ல அதற்கு சிவகார்த்திகேயனும், “சார் என்ன சார் கேக்கறீங்க, நாம பண்றோம் சார். ஒரு ஹிட் ஆல்பம் கிடைக்கப் போகுது, நான் ரெடி சார், நாளை சந்திக்கிறேன், வேலையை ஆரம்பிக்கிறோம்,” என கூறியுள்ளார். ஆனால், அனிருத்தோ, ‘உடனே வாங்க’ எனக் கூறியுள்ளார். காஸ்டியூம் டிசைனர் அனு பார்த்தசாரதிக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator