கடைக்குட்டி சிங்கத்துக்கு யு சான்றிதழ் – ஜூலை 13ல் ரீலீஸ்

2டி எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் நடிகர் சூர்யாக கடைக்குட்டி சிங்கம் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி இந்த படத்தில் விவசாயியாக நடித்துள்ளார். விவசாயிகளின் பெருமையை பேசும் விதமாக கடைக்குட்டி சிங்கம் உருவாக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களிடையே எப்போது ரிலீஸ் ஆகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த படத்துக்கு யு சான்றிதழ் கிடைத்திருப்பதை தனது டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் சூர்யா தெரிவித்துள்ளார். இத்துடன் ஜுலை 13ம் தேதி கடைக்குட்டி ரிலீஸ் ஆகும் என அவர் அறிவித்துள்ளார். கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் நேரடியாக ரிலீஸ் ஆக உள்ளது.

இப்படத்தில் கார்த்தியுடன், சூரி, சாய்ஷா உள்பட பலர் நடித்துள்ளனர். இமான் இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பாண்டிராஜ் இயக்கிய ‘கதகளி’, ‘இது நம்ம ஆளு’, ‘பசங்க’ 2 ஆகிய படங்கள் கமர்ஷியலாக வெற்றியடைவில்லை. சிறிய இடைவெளிக்குப் பிறகு தற்போது கார்த்தி நடிக்கும் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தை இயக்கி வருகிறார் பாண்டிராஜ்

இந்தப் படத்தில் கார்த்தியுடன் சாயிஷா சைகல் கதாநாயகியாக நடிக்க, சத்யராஜ், சூரி, ப்ரியா பவானி சங்கர், மௌனிகா, ஸ்ரீமன், பானுப்ரியா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்தை சூர்யாவின் ‘2D என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் தயாரிக்கிறது.
இந்தப் படத்திற்கு டி.இமான் இசை அமைக்கிறார்.

சத்யராஜ் மனைவிகளாக பானுப்ரியா, விஜி சந்திரசேகர் இருவரும் நடித்துள்ளனர். பொன்வண்ணன், சூரி, ஸ்ரீமன், சவுந்தர ராஜா, மவுனிகா, யுவராணி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

விவசாயி வேடத்தில் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார் கார்த்தி. அதுவும் மாதம் ஒன்றரை லட்சம் சம்பாதித்து, தன்னுடைய புல்லட்டில் ‘விவசாயி’ எனப் பெருமையுடன் ஸ்டிக்கர் ஒட்டி வைத்திருக்கும் விவசாயி வேடத்தில் அவர் நடித்திருக்கிறார்.

ஃபேமிலி எண்டெர்டெயினராக உருவாகியுள்ள இந்தப் படம், தெலுங்கில் ‘சின்ன பாபு’ என்ற பெயரில் வெளியாகிறது. இந்தப் படத்தைப் பார்த்த மத்திய தணிக்கை வாரிய உறுப்பினர்கள், ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர். வருகிற வெள்ளிக்கிழமை (ஜூலை 13) இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, இரும்புத்திரை சினிமா இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிக்கிறார் கார்த்தி. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here