காற்றின் மொழியில் ஜோதிகா உடன் நடிக்கும் சிம்பு – கவுரவ வேடமாம்

சென்னை: மொழி படத்தற்கு பிறகு ராதா மோகன் இயக்கத்தில் நடிகை ஜோதிகா மீண்டும் நடித்து வருகிறார். அது காற்றின் மொழி, அந்த படத்தில் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மொழி படத்தற்கு பிறகு ராதா மோகன் இயக்கத்தில் நடிகை ஜோதிகா மீண்டும் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு காற்றின் மொழி எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படம் கடந்தாண்டு இந்தியில் ரிலீசான, ‘துமாரி சுலு’ என்ற படத்தின் ரீமேக் ஆகும்.

இந்த படத்தில் நடிக்க நடிகர் வித்தார்த் ஒப்பந்தம் ஆகி உள்ளார். இந்தியில் இந்தப் படத்தை சுரேஷ் திரிவேணி இயக்கியிருந்தார். இது அனைவராலும் மிக கவரப்பட்ட படம். நல்ல வரவேற்ப்பு மற்றும் வசூலைப் பெற்று தந்தது.

நடிகராக இருந்த சிலம்பரசன் 2004ஆம் ஆண்டு மன்மதன் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். வெற்றிப்படமாக அமைந்த அந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருந்தார். பின் இவர்கள் இருவரும் இணைந்து 2006ஆம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சரவணா என்ற திரைப்படத்தில் நடித்தனர்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது செக்கச் சிவந்த வானம் படத்தில் சிம்பு, ஜோதிகா இணைந்து நடித்து வருகிறார்கள்.

அதனையடுத்து தற்போது ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடித்து வரும் காற்றின் மொழி படத்தில் நடிகர் சிம்புவாகவே கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார். பண்பலைத் தொகுப்பாளினியாக வித்யா பாலன் நடித்த வேடத்தில் ஜோதிகா நடிக்கிறார்.

இதில் ஜோதிகா நடத்துகிற நிகழ்ச்சியில் ஒரு ஸ்டார் பாராட்டுகிற மாதிரி காட்சியில் சிம்பு நடித்தால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்து அவரை நடிக்க வைத்திருக்கிறார்கள் படக்குழுவினர்.

சிம்புவும், ஜோதிகாவின் பெரிய ரசிகர் என்பதால் உடனே ஒத்துக் கொண்டுள்ளார். படத்தில் அது பெரிய சீன் என்பதால் வேகமாகவும், அழகாகவும் முடித்து கொடுத்திருக்கிறாராம் சிம்பு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here