பாங்காங் வீதியில் உலா வரும் ஓவியா ஆரவ் – காதலா, நட்பா?

சென்னை: நடிகை ஓவியாவும் நடிகர் ஆரவ்வும் பாங்காக் வீதிகளில் உலா வரும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

களவாணி திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஓவியா. இந்த படம் ஹிட் அடிக்கவே,  கன்னடம் மற்றும் தெலுங்கு ரீமேக்கிலும் அவரே ஹீரோயினாக நடித்தார்.

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக மெரினா, சுந்தர்.சி இயக்கத்தில் கலகலப்பு மற்றும் மூடர் கூடம், மதயானைக் கூட்டம், புலிவால், சில்லுனு ஒரு சந்திப்பு, சண்டமருதம் போன்ற திரைப்படங்களிலும் நடித்த ஓவியா கமல் ஹாசன் நடிப்பில் வெளியான மன்மதன் அம்பு திரைப்படத்தில் கௌரவ வேடத்திலும் நடித்தார்.

ஓவியா கடந்த ஆண்டு பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவில் 15 போட்டியாளர்களில் ஒருவராக களமிறங்கினார். ஓவியாவின் அணுகுமுறை, எதையும் பாஸிட்டிவாக எடுத்துக்கொள்ளும் மனோபாவம் ஆகியவை அவருக்கு நிறைய ரசிகர்களை பெற்றுக்கொடுத்தது.

ஆரவிடம் தனது காதலை வெளிப்படுத்திய ஓவியாவிற்கு ஏமாற்றமாக இருந்தது அவரது பதில். இருந்த போதிலும் இருவரும் நல்ல நண்பர்களாக தொடர்வது என முடிவு செய்து அறிவித்தனர். தங்களுக்குள் வேறு எந்த உறவும் இல்லை என அவர்கள் தெரிவித்தனர். பிக்பாஸ் 1 சீசனில் வெற்றி பெற்றார் ஆரவ்.

இந்நிலையில் ஓவியாவும் ஆரவ்வும் தாய்லாந்தின் பாங்காக் நகரில் கைக்கோர்த்தபடி உலாவரும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.நடிகை ஓவியாவும் நடிகர் ஆரவ்வும் பேங்காக் வீதிகளில் உலா வரும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது ஹாட் டாபிக்காக உள்ளன. ஓவியா தற்போது களவாணி 2 படத்தில் விமலுடன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here