களவாணி 2 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் – ஓவியா ஆர்மிகள் உற்சாகம்

சென்னை: நடிகை ஓவியா நடிப்பில் உருவாகிவரும் களவாணி 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் மாதவன் வெளியிட்டுள்ளார்.

சற்குணம் இயக்கத்தில் 2010ம் ஆண்டு வெளியான படம் களவாணி. விமல், ஓவியா நாயகன், நாயகியாக இந்த படத்தில் நடித்தனா். சரண்யா பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, இளவரசு, சூரி, திருமுருகன் ஆகியோா் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனா். இந்த படம் நல்ல வரவேற்ப்பை பெற்று பெரும் வெற்றி அடைந்தது.

ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்த இந்த படத்திற்கு எஸ்.எஸ்.குமரன் இசையமைத்திருந்தாா். ராஜா முகமது படத்தொகுப்பாளராகப் பணியாற்றினாா். ரொமாண்டிக் காமெடி வகையைச் சோ்ந்த இந்தப் படம் ரசிகா்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு இதன் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது. விமல், ஓவியாவே மீண்டும் இணைந்து நடித்துள்ள இந்த படத்தை சற்குணமே தயாரித்தும் இருக்கிறாா். முதல் பாகம் படம்பிடிக்கப்பட்ட பகுதிகளிலேயே இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பும் நடைபெற்றுள்ளது.

களவாணி படத்தில் அறிமுகமான ஓவியா தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார். இருப்பினும் முன்னணி கதாநாயகி பட்டியலில் அவர் இடம்பெறவில்லை. விமல், சிவா, கதிர், மெரினாவில் சிவகார்த்திகேயன் தவிர மற்ற முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை அவர் பெறவில்லை.

பிக் பாஸ் நிகழ்ச்சில் அவர் பங்கேற்ற பின் அவரது வாழ்க்கை திருப்பு முனையாக அமைந்தது . இந்த நிகழ்ச்சியில் ஓவியாவின் அணுகுமுறை, எதையும் பாஸிட்டிவாக எடுத்துக்கொள்ளும் மனோபாவம் ஆகியவை அவருக்குத் தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துக்கொடுத்துள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் பல திரைப்படங்களில் ஒப்பந்தமாகி பிசியாக நடித்து வருகிறார். அந்த வவையில் சற்குணம் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான ‘களவாணி’ படத்தின் இரண்டாம் பாகம் களவாணி-2 ஆக 8 ஆண்டுகளுக்குப் பிறகு தயாராகியுள்ளது. விமல், ஓவியா மீண்டும் இணைந்து நடித்துள்ள இந்தப் படத்தை, சற்குணமே தயாரித்தும், இயக்கியும் இருக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. ஃபர்ஸ்ட் லுக்கை சற்குணம் அடுத்து இயக்கும், ‘மாறா’ படத்தில் நாயகனாக நடிக்கவுள்ள நடிகர் மாதவன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஓவியா சம்பந்தமான செய்தி வெளியாகியுள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

பிக் பாஸிற்கு பிறகு ஓவியா மக்களிடையே நல்ல இடத்தை பெற்றுள்ளார். அதன் பிறகு அவர் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அவர் தற்போது நடித்து வருகின்ற களவாணி -2 பர்ஸ்ட் லுக் போஸ்டர் மிக வைரலாக பரவி வருகிறது. விரைவில் இசை வெளியிடப்படும் என ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here