கிச்சா சுதீப், சிவராஜ் நடிக்கும் வில்லன் டீசர் 28ல் ரிலீஸ் – இயக்குநர்களுக்கு உதவி

பெங்களூரு: சிவராஜ் குமார், சுதீப் நடிக்கும் ‘தி வில்லன்’ படத்தின் டீசர் ஜூன் 28ஆம் தேதி பிரம்மாண்டாக வெளியாகிறது. இந்த படத்தின் டீசரை கன்னட பட இயக்குநர்களின் குடும்பங்களுக்கு சமர்ப்பிக்க உள்ளதாக படத்தின் இயக்குநர் பிரேம் கூறியுள்ளார்.

டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டான இதில் ‘சென்சுரி கிங்’ சிவராஜ் குமாரும், ‘ஸ்டைலிஷ் கிங்’ சுதீப்பும் நடித்து வருகின்றனர். ‘தி வில்லன்’ என டைட்டிலிட்டுள்ள இதனை பிரேம் என்பவர் இயக்கியுள்ளார்.

தி வில்லன் கன்னட திரைப்படம் கன்னட திரைப்பட ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தினை ஜோகி பிரேம் இயக்கியுள்ளார். இந்த படத்தில் அதிக கிராஃபிக்ஸ் காட்சிகள் உள்ளதாம். அர்ஜுன் ஜான்யா இசையமைத்துள்ள இதற்கு கிரிஷ்.ஆர்.கௌடா ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் செம லைக்ஸ் குவித்ததோடு, படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பையும் அதிகரிக்க செய்தது.

இந்த படத்தின் டீசர் வரும் 28ஆம் தேதி பெங்களூருவில் உள்ள ஜிடி மாலில் பிரம்மாண்டாக வெளியிடப்பட உள்ளது. கர்நாடகா முதல்வர் எச் டி குமாரசாமி வெளியிடுகிறார். இந்த டீசர் வெளியிடுவதன் முக்கிய அம்சமே 500 ரூபாய் கட்டணம் செலுத்திதான் டீசரையே பார்க்க முடியும்.

சுதீப், சிவராஜ்குமார் ஆகிய இரண்டு நடிகர்களின் ரசிகர்களுக்காவும் தனித்தனியாக டீசர் வெளியிடுகின்றனர். 500 கட்டணம் பெறுவதன் மூலம் சிரமமான நிலையில் இருக்கும் இயக்குநர்களின் குடும்பத்தினருக்கு உதவி செய்ய வேண்டும் என்பதற்காகத்தான். இந்தியாவிலேயே முதன் முறையாக டீசரை பார்க்க கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து விளக்கம் அளித்த பிரேம், இயக்குநர்கள்தான் படத்தின் உண்மையான ஹீரோ. இன்றைக்கு பல இயக்குநர்கள் உடல் நலக்குறைவினால் மருத்துவ உதவி கூட கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். அவர்களுக்காகவே பணம் வசூல் செய்யப்படுவதாகவும் அவர் கூறினார். தி வில்லன் படத்தின் டீசரை இயக்குநர்களுக்கு சமர்பணம் செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here