ஸ்ரீரங்கம் கோவிலில் மு.க.ஸ்டாலினுக்கு பூரணகும்ப மரியாதை!

திருச்சி: திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி பிரமுகர் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேற்று ஸ்ரீரங்கம் வந்தார். திருமணமத்திற்கு செல்லும் வழியில் ஸ்ரீரங்கம் ரெங்கா கோபுரம் முன் கோவில் பட்டர்களில் ஒருவர் சால்வை அணிவித்து வரவேற்றார்.ஸ்டாலின் நெற்றியில் பொட்டு வைத்து ஆசி வழங்கினார். அங்கிருந்த யானை அவருக்கு மாலை போட்டு வரவேற்றது. ஸ்டாலின் அந்த யானைக்கு கரும்பு துண்டுகள், வெல்ல கட்டிகளை வழங்கினார்.ஸ்டாலினுக்கு பிராமணர் சங்கம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. மேலும் அடுத்தமுறை நீங்கள் முதல்-அமைச்சராக வரவேண்டும் என தெரிவித்தனர்.ரங்கம் கோவில் பகுதியில் உள்ள அடிமனை பிரச்சினைக்கு நீண்ட காலமாக தீர்வு காணப்படாமல் உள்ளது. இதுபற்றி சட்டமன்றத்தில் நீங்கள் பேசி இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here