பள்ளி கழிவறையில் மாணவன் கொலை!

குஜராத்: குஜராத் மாநிலம் வதோதராவில் பாரதி வித்யாலயா பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் கழிவரையில் 9ம் வகுப்பு மாணவன் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.பள்ளி ஊழியர்கள் நண்பகல் கழிவரைக்கு சென்றுள்ளனர். அங்கு 9ம் வகுப்பு மாணவன் ஒருவர் கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார். அருகில் ரத்த கறையுடன் கத்தி இருந்துள்ளது.அதிர்ந்துப்போன ஊழியர்கள் போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்துள்ளனர். மாணவனின் உடலை மீட்ட போலீசார் பிரேதபரிசோதனைக்கு அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.விசாரணையில் பள்ளி மாணவர்களிடையே சில நாட்களுக்கு முன் மோதல் நடந்ததாக தெரிகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here