ரயிலில் ரூ.6.4 லட்சம் கஞ்சா பறிமுதல்! 3 பெண்கள் கைது!!

ஈரோடு: ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரளா மாநிலட் ஆலப்புழா வரை தன்பாத் விரைவு சென்றது. இதில் கஞ்சா கடத்துவதாக இரயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.ஈரோடு மாவட்டக் காவல் ஆய்வாளர் சம்பத் தலைமையில் சேலம் ரயில் நிலையத்தில் ஏறினர். ஓடும் ரயிலில் சோதனை நடத்தினர். சந்தேகத்திற்கு இடமான 3 பெண்களிடம் இருந்த பண்டல்களில் ஒன்றை பரிசோதித்தனர். அதில் கஞ்சா இருந்துள்ளது. அதையடுத்து மூன்று பெண்களையும் ஈரோடு இரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.விசாரணையில் அவர்கள் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள மாயம்குரும்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.மூவரும் விசாகப்பட்டினத்தில் இருந்து திருப்பூருக்கு இரயில் மூலம் 64 கிலோ கஞ்சாவை கடத்திச்சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்து ஈரோடு இரயில்வே காவலாளர்கள் வழக்குப்பதிந்துமூவரையும் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 64 கிலோ கஞ்சாவின் மதிப்பு ரூ.6.40 லட்சம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here