கமலின் கட்சி! இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம்!!

சென்னை: நடிகர் கமல்ஹாசன் மதுரையில் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கினார். அதன் பின்னர் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டார்.கிராமசபை கூட்டம் மற்றும் காவிரிக்காக அனைத்து கட்சி கூட்டம் நடத்தினார். மக்கள் கட்சி மய்யம் சார்பாக் விசில் செயலி அறிமுகப்படுத்தினர்.மக்கள் நீதி மய்யம் கட்சியின் பெயர் மற்றும் கொடிக்கு இந்திய தேர்தல் ஆணையத்தில் அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்தார்.இந்திய தேர்தல் ஆணையம் விண்ணப்பத்தை பரீசிலனைக்கு ஏற்றுக்கொண்டது. மே31 வரை ஆட்சேபம் தெரிவிக்கலாம் என தெரவித்தது. இந்திய தேர்தல் ஆணையம் ஜூன் 20ஆம் தேதி நேரில் வருமாறு உத்தரவிட்டது.டெல்லியில் உள்ள இந்தியத் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நேரில் சென்று அதிகாரிகளை சந்தித்தார். மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் நேற்று ஜூன் 22ம் தேதி அங்கீகாரம் வழங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here