விழுப்புரம்: சீனிவாசன் விழுப்புரம் வாட்டம் பூவனூர் கிராமத்தை சேர்ந்தவர். அதே ஊரை சேர்ந்தவர் ஜெயந்தி. இருவரும் காதலித்து வந்துள்ளனர்.இருவரும் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இதனால் ஜெயந்தி கர்ப்பமடைந்தார். சீனிவாசனிடம் பலமுறை தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுள்ளார்.
சீனிவாசன் திருமணத்தை தள்ளிப்போட்டுள்ளார். ஜெயந்தி 6 மாத கர்ப்பிணியானார். இது குறித்து தன் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதிர்ச்சிக்குள்ளான பெற்றோர் 20 தினங்களுக்கு முன் இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
சம்பவத்தன்று ஜெயந்தியை கோவிலுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவரை அடித்து கொலை செய்துள்ளார். பின்னர் ஜெயந்தியை காணவில்லை என நாடகமாடியுள்ளார். போலீசார் சந்தேகத்தன் பேரில் சீனிவாசனிடம் தீவிர விசாரணை நடத்தினர். உண்மையை ஒப்புக்கொண்டதையடுத்து சீனிவாசனை போலீசார் கைது செய்துள்ளனர்.