மாரி 2 படப்பிடிப்பில் தனுஷிற்கு காயம்!

சென்னை: தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகும் படம் மாரி 2. இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. டோவினோ தாமஸ் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.டோவினோ தாமஸ் மற்றும் தனுஷ் இடையேயான முக்கியமான சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது. படப்பிடிப்பின் போது தனுஷின் வலது முட்டியிலும், இடது தோள்பட்டையிலும் காயம் ஏற்பட்டுள்ளது.இது குறித்து நடிகர் தனுஷ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் பெரிய காயம் ஒன்றுமில்லை. நலமாக இருக்கிறேன். அனைவரின் அன்பிற்கும், பிரார்தனைக்கும் நன்றி. உங்கள் அன்பு தான் எனது பலம் என்று தெரிவித்துள்ளார்.இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஆட்டோ ஓட்டுநர் கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடிக்கிறார். மேலும், வரலக்ஷ்மி சரத்குமார், கிருஷ்ணா, அறந்தாங்கி நிஷா, வித்யா பிரதீப், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். யுவன் சங்கர் ராஜா
இசையமைக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here