கர்நாடகாவில் பாஜக நிர்வாகி குத்திக் கொலை!

சிக்மங்களூர்: முகமது அன்வர் கர்நாடக மாநிலம் சிக்மகளூர் புறநகர் மாவட்ட பாஜக பொதுச்செயலாளராக பதவி வகித்து வந்தார். கவுரி கால்வாய் பகுதியில் நேற்று இரவு சென்று கொண்டிருந்தார்.அப்போது சிலர் இருசக்கர வாகனத்தில் வந்தனர். முகமது அன்வர் எதிர்பாரத சமயத்தில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் கத்தியால் சரமாரியாக குத்தினர்.பலத்த காயமடைந்த அன்வர் அங்கேயே அலறியபடி சரிந்து விழுந்துள்ளார். அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் அன்வரை மீட்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அன்வர் இறந்து விட்டாக தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here