பிரபலமாகும் ஆசையில் வீடியோ! நிலானி வாக்குமூலம்!!

தூத்துக்குடி: சின்னத்திரை நடிகை நிலானி தூத்துக்குடியில் நடந்த போலீஸ் துப்பாக்கி சூடு தொடர்பாக போலீசாரை கடுமையாக விமர்சித்து வீடியோ பதிவு வெளியிட்டார். போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்திருந்தனர்.நேற்று முன்தினம் குன்னூரில் நிலானியை போலீசார் கைது செய்தனர். நீதிமன்ற காவலில் 15 நாள் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.அதையடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.முன்னதாக அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. அதில் எனக்கு சொந்த ஊர் தஞ்சை. சிறு வயதில் இருந்தே சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டும் என்று ஆசை இருந்தது. இதற்காகவே சென்னைக்கு வந்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினேன்.
தொலைக்காட்சி தொடர்களில் தான் வாய்ப்பு கிடைத்தது.இதனால் தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடந்த நேரத்தில் சின்னத்திரை படப்பிடிப்பில் காவல்துறை அதிகாரியாக நடிக்கும் போது போலீஸ் சீருடையிலேயே பேசிய வீடியோவை பேஸ்புக்கில் வெளியிட்டேன். என்னை பற்றி மக்கள் பரவலாக பேச வேண்டும் என்பதற்காகத்தான் வீடியோவை பதிவு செய்தேன். அது எனக்கு எதிராக அமைந்துவிட்டது என வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here