கூடலூர் வனப்பகுதியில் புலி பலி!

கூடலூர்: நீலகிரி கூடலூர் வனச் சரகம் பாடந்தொரை கடசனக்கொல்லி வனத்தில் புலி இறந்துள்ளது. இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.கூடலுார் வன அலுவலர் ராகுல், வனச்சரகர் ராமகிருஷ்ணன், வனகாப்பாளர்கள் பிரதீப், சங்கர் மற்றும் வன ஊழியர்கள் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர்.வனத்துறையினர் புலியின் உடலை வாகனத்தில் ஏற்றி கூடலூர் ஈட்டிமூலா வனத் துறை அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர்.இன்று புலியின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்படும். பிரேத பரிசோதனைக்கு பிறகே உயிரிழந்ததற்கான காரணம் தெரியும். இறந்த ஆண் புலிக்கு சுமார் 10 வயதிருக்கும் என்றும் வனச்சரக அலுவலர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here