Connect with us

Cinema

‘ரஜினிகாந்த் வில்லா-3’ சினிமா டைட்டில் இல்லீங்க!

Published

on

டார்ஜிலிங்: காலாவின் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங் பகுதியில் நடந்து வருகிறது.ரஜினிகாந்த் தங்குவதற்கு குர்சியாங்கில் உள்ள அலிதா என்ற தனியார் விடுதியில் டைரக்டர்ஸ் பங்களாவில் தங்கி இருக்கிறார். விடுதியில் தங்கி இருந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டார். ரஜினிகாந்த் தங்கி இருந்த வில்லா பகுதிக்கு அவரது பெயரை சூட்ட ஓட்டல் நிர்வாகத்தினர் முடிவு செய்தனர்.இதையடுத்து ரஜினி தங்கியிருந்த வில்லாவிற்கு ரஜினிகாந்த் வில்லா-3 என பெயர் சூட்டி, அதை ரஜினிகாந்தை வைத்தே திறந்து வைத்துள்ளனர்.அங்குள்ள சாய் டீ பார் லவுஞ்சில் ரஜினி டீயை விரும்பி சாப்பிட்டார். அதற்கு தலைவா ஸ்பெஷல் என்றும் பெயர் சூட்டி பலகை வைத்தனர். பெயர் சூட்டிய படங்கள் டுவிட்டரில் வெளியாகி உள்ளன.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator