பண மதிப்பிழப்பு விவகாரம்! அமித் ஷா இயக்குநராக உள்ள வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட்!!

குஜராத்: கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். 500, 1000 நோட்டுகள் வங்கிகள், தபால் நிலையங்களில் மாற்றிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. நவம்பர் 14, 2016 மாவட்டக் கூட்டுறவு வங்கிகளில் பழைய நோட்டுகளை டெபாசிட் செய்ய தடை விதிக்கப்பட்டது.மனோரஞ்சன் எஸ்.ராய் சமூக ஆர்வலர். மும்பையை சேர்ந்தவர். தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆர்டிஐ) மூலம் டெபாசிட் செய்யப்பட்ட பணம் விவரங்களை வங்கி வாரியாக தகவல் கேட்டிருந்தார். கிராமப்புற மற்றும் விவசாய வளர்ச்சிக்கான தேசிய
வங்கியின் தலைமை பொது மேலாளர் சரவணவேல் ஆர்டிஐ மூலம் தகவல் வெளியிட்டுள்ளார்.பாஜக தேசிய தலைவர் அமித் ஷா அகமதாபாத் கூட்டுறவு வங்கியில் இயக்குனராக உள்ளார். இந்த வங்கியில்5 நாட்களில் ரூ. 745.59 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.2017, மார்ச் 31ஆம் தேதிவரை இந்த வங்கியில் ரூ. 5,050 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. 2016-2017ஆம் ஆண்டுக்கான வங்கியின் நிகர லாபம் என்பது 14.31 கோடியாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here