ஜேசிபி வாகனத்தில் ஊர்வலம் சென்ற திருமண ஜோடி!

கர்நாடகா: சேத்தன் தெற்கு கர்நாடகாவை சேர்ந்தவர். ஜே.சி.பி. ஓட்டுனர். தனது வேலையின் மீது அதீத காதல் கொண்டவர்.இவருக்கும் மமதா என்பவருக்கும் கடந்த 18ம் தேதி திருமணம் நடந்தது.மணமகன் சேத்தன் தங்களது திருமண ஊர்வலத்தை ஜே.சி.பி. வாகனத்தில் நடத்த முடிவு செய்தார். இதற்கு மணமகள் மமதா சம்மதம் தெரிவித்துள்ளார்.இதையடுத்து புதுமண தம்பதிகள் ஜேசிபியில் மணமகன் இல்லத்திற்கு ஜோடியாக கல்யாண ஊர்வலம் சென்றனர். இது அப்பகுதியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here