ஐபோன் திருடியவனை பேஸ்புக் வைத்து கண்டுப் பிடித்த உரிமையாளர்!

சென்னை: சிமியோன் சென்னை பெரம்பூரை சேர்ந்த இளைஞர். இவர் மாற்று சிம்கார்டு வாங்குவதற்காக புரசைவாக்கத்தில் உள்ள ஷோரூம் சென்றுள்ளார். தன்னிடம் உள்ள ஆப்பிள் ஐபோனை மேஜையில் வைத்துவிட்டு விண்ணப்பத்தை பூர்த்தி செய்துள்ளார்.விண்ணபத்தை பூர்த்தி செய்துவிட்டு மேஜையில் வைத்த போனை காணமல் அதிர்ந்து போனார். இது குறித்து ஷோரூமில் உள்ள சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆராய்ந்துள்ளார். அதில வடமாநில இளைஞர் போனை திருடியது தெரியவந்தது. அவரின் விபரங்களை ஷோரூமில் பெற்றுள்ளார்.திருடிய இளைஞரின் செல்போன் எண் மூலம் அவரன் பேஸ்புக் முகவரியை கண்டுபிடித்துள்ளார். அதில் திருடியவரின் அடையாளம் ஒத்துப்போனது.இந்தி தெரிந்த தனது நண்பர் ஜாபர் மூலம் திருடனுக்கு போன் செய்து அவருக்கு வேலை தயாராக இருப்பதாக கூறியுள்ளார். இதை நம்பிசெல்போன் திருடியவர் தனது முகவரியை தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட முகவரிக்கு சென்ற சிமியோன் தனது ஐபோனை மீட்டார். திருடு போன ஐபோனை கண்டுபிடிக்க புலன்விசாரணை செய்த இளைஞரை காவல்துறையினர் பாராட்டியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here