மாம்பழம் பறித்த சிறுவன் சுட்டுக் கொலை!

பீகார்: பீகார் மாநிலம் ககாரியா நகரில் மாந்தோப்பு அமைந்துள்ளது. அதே பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவன் மாமரத்தில் இருந்த மாம்பழத்தை பறிக்க ஆசைப்பட்டுள்ளான்.இதையடுத்து சிறுவன் உரிமையாளருக்கு தெரியாமல் மாம்பழம் பறித்துக் கொண்டிருந்தான்.மர்மநபர் துப்பாக்கியால் சுட்டதில் சிறுவன் தலையில் குண்டடிப்பட்டு உயிரிழந்தான். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.விரைந்து வந்த போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து துப்பாக்கியால் சுட்டவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here