Connect with us

Crime

போக்குவரத்து நெரிசலால் எரிச்சல்! ஆட்டோ டிரைவரை சுட்ட பெண்!!

Published

on

டெல்லி:போக்குவரத்து நெரிசலுக்கு காரணமான ஆட்டோ டிரைவர் மீது பெண் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
டெல்லியை அடுத்த குர்கானில் உள்ளது பவானி என்க்ளேவ் அடுக்குமாடி குடியிருப்பு.இங்கு வசித்துவருபவர் ஷப்னா(23). தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார்.
இரவுப்பணி முடித்து புதன்கிழமை வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
இவரது குடியிருப்பின் வாசலை அடைத்துக்கொண்டு ஆட்டோ ஒன்று நின்றுகொண்டிருந்தது.ஷப்னா தனது ஸ்கூட்டரில் இருந்து இறங்கி ஆட்டோவை ஓரமாக நிறுத்தக்கூறினார்.
இருவருக்கும் தகராறு எழுந்தது. அங்கிருந்து ஆவேசமாக சென்ற ஷப்னா கைத்துப்பாக்கியுடன் திரும்பினார்.
ஆட்டோ டிரைவர் சுனில் மீது சுட்டார். இதனால் சுனிலின் கையில் காயம் ஏற்பட்டது.இதுகுறித்து போலீசில் புகார் செய்தார் சுனில். ஷப்னா கைது செய்யப்பட்டார்.
அப்பகுதியில் டெய்லர் கடை நடத்திவரும் உறவினரிடம் இருந்து லைசன்ஸ் பெறாத துப்பாக்கியை அவர் எடுத்துவந்து சுனிலை சுட்டுள்ளார்.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator