மனைவி சொல்லே மந்திரம்! குடும்பத்தை பிரிக்கும் திட்டத்தை கைவிட்டார் டிரம்ப்!!

வாஷிங்டன்: அமெரிக்காவில் அகதிகள் வருகை அதிகரித்து வருகிறது. சட்டத்துக்கு புறம்பாக நுழையும் அகதிகளை தடுக்க புதிய திட்டத்தை டிரம்ப் கொண்டு வந்தார். அகதிகள் குடும்பத்தில் இருந்து குழந்தைகள் பிரிக்கப்பட்டனர்.குழந்தைகளுக்காக தனி காப்பகங்கள் அமைக்கப்பட்டு அங்கு பராமரிக்கப்பட்டனர்.
இப்புதிய சட்டம் நடைமுறைக்கு வந்தும் அகதிகள் வருகை தொடர்ந்துகொண்டே இருந்தது. இருப்பினும் புதிய சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு நாடுமுழுவதும் கிளம்பியது.டிரம்பின் மனைவி மெலனியா, முன்னாள் அதிபர் ஜார்ஜ்புஷ்ஷின் மனைவி லாரா ஆகியோரும் இத்திட்டத்தை கடுமையாக எதிர்த்தனர். இதனை தொடர்ந்து அகதிகள் குடும்பத்தை பிரிக்கும் திட்டத்தை கைவிட்டார் டிரம்ப்.இதுதொடர்பாக அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 10நாட்களாக காப்பகங்களில் தவித்துவந்த குழந்தைகள் பெற்றோருடன் சேரவுள்ளனர். அனுமதியின்றி அமெரிக்காவில் குடியேறும் குடும்பத்தினர் சிறையில் தள்ளப்படுவார்கள் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here