ஜீப் மீது டிராக்டர் மோதி 12 பேர் பலி!

மத்தியப்பிரதேசம்: மத்தியப்பிரதேசம் மாநிலம் மோரேனா பகுதியில் ஜீப் மீது டிராக்டர் பயங்கரமாக மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்த 6 பேரை அருகிலிருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விபத்தில் பலியானவர்களை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here