ஆசிரியர் இடமாற்றம்! மாணவர்கள் கண்ணீர்!!

திருவள்ளூர்: ஆசிரியர் பகவான், திருவள்ளூரை அடுத்துள்ள வெளியகரம் அரசு பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தவர்.  இந்த பள்ளியில் சுமார் 300 பேர் படித்து வருகின்றனர்.கடந்த 5 வருடங்களாக இந்த பள்ளியில் ஆசிரியராக பணியில் உள்ளார். பாடம் நடத்தும் முறை, நடத்தை போன்றவற்றால் மாணக்கர்களுக்கு மிகவும் பிடித்து போனது.பகவானுக்கு பணியிட மாறுதல் கிடைத்துள்ளது. அதற்குரிய உத்தரவை வாங்க நேற்று பள்ளிக்கு வந்துள்ளார். மாணவர்கள் வகுப்பறையை புறக்கணித்து பகவானிடம் இங்கேயே இருக்குமாறு கண்ணீருடன் கேட்டனர். இதனால் பகவானும் கண்ணீர் விட்டார்.மற்ற ஆசிரியர்கள் சமாதானம் செய்தும் மாணவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை.போலீசாரை வரவழைத்து பகவானை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். மேலும் ஆசிரியரின் பணியிட மாற்றம் நிறுத்தி வைத்துள்ளதாக கல்விதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here