கலப்பு திருமணம் செய்தவருக்கு பாஸ்போர்ட் மறுப்பு!

உத்திரப்பிரதேசம்: லக்னோவை சேர்ந்தவர் தான்வி சேத். இவர் முகம்மது சித்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் தான்வி சேத் தனக்கு பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.பாஸ்போர்ட் வாங்க சென்ற போது அதிகாரி ஒருவர் தன்னை அவமானபடுத்தியதாக கூறியுள்ளார். வேறு மதத்தை சேர்ந்தவரை திருமணம் செய்த பிறகு பெயர் மாற்றம் செய்யாததால் பாஸ்போர்ட் தரவில்லை.மேலும் தாக்குவது போலவும் நடந்து கொண்டார். பாஸ்போர்ட் வழுங்குவதற்கு உரிய ஆவணங்கள் உள்ளன. இது குறித்து அமைச்சர் சுஷ்மாவிடம் புகார் அளித்துள்ளோம்.இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, தம்பதிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டு விட்டது. சம்பந்தப்பட்ட அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறோம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here