நரேந்திரமோடி எனக்கு ராமர்! மனைவி யசோதாபென் பேச்சு!!

அகமதாபாத்: குஜராத்தி பத்திரிக்கை சமீபத்தில் மத்தியப்பிரதேச கவர்னர் ஆனந்திபென் பட்டேல் பேட்டி அளித்தார். பிரதமர் மோடி திருமணம் ஆகாதவர் என பேட்டியில் கூறி இருந்தார்.இதற்கு பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி யசோதாபென் மொபைல் போனில் விடியோ மூலம் பதிலளித்துள்ளார். ஆனந்திபென்னின் இந்த வார்த்தைகள் எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது.மோடி 2004 ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் போட்டியிட்டார். அப்போது தான் திருமணம் ஆனவர் என குறிப்பிட்டுள்ளார். எனது பெயரை மனைவி எனவும் குறிப்பிட்டுள்ளார்.குஜராத்தின் முன்னாள் முதல்வராக இருந்த பெண்மணி சாதாரண பெண்ணைப் போல் பேசி உள்ளார். அவரின் பேச்சு இந்திய பிரதமரின் கவுரவத்தை கெடுக்கும் வகையில் உள்ளது. மோடி எனக்கு மிகவும் மரியாதைக்கு உரியவர் மட்டுமல்ல. அவர் எனக்கு
ராமர் என அதில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here