போதைப்பொருள் பதுக்கல்! பாஜக தலைவர் கைது!!

மணிப்பூர்:பாஜக பிரமுகர் வீட்டில் ரூ.27கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள், துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன.
எல்லைப்பகுதியில் போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க ‘நாப்’ என்ற காவல்பிரிவு மணிப்பூரில் இயங்குகிறது.இப்பிரிவினர் சாந்தல் மாவட்டநிர்வாகக்குழு தலைவர் லத்கோசிசூ என்பவர் வீட்டை சோதனையிட்டனர்.
காங்கிரஸ் சார்பில் 2017ல் தேர்தலில் போட்டியிட்ட இவர் குதிரைபேரத்தில் சிக்கி பாஜக-வில் இணைந்தார்.
இவர் வீட்டில் கட்டுக்கட்டாக போதைப்பொருள், அனுமதியின்றி துப்பாக்கிகள் இருந்தது தெரியவந்தது.4.5கிலோ ஹெராயின், 28கிலோ போதை மாத்திரை, ரூ.57லட்சம் ரொக்கப்பணம், ரூ.ஒருலட்சம் மதிப்புள்ள செல்லாத ரூ.500, ரூ.1000நோட்டுகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். லத்கோசிசூ கைதுசெய்யப்பட்டார்.

அவர் வீட்டில் பணியாற்றிவந்த ஒரு பெண் உள்ளிட்ட 6பேரையும் கைதுசெய்தனர்.
இச்செய்தி தெரியவந்ததும் அவர் பாஜக கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக மாநில பாஜக தலைவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here