திமுகவுக்கு கடிவாளம் போடும் காங்கிரஸ்!

சென்னை: 2019மக்களவை தேர்தலில் மூன்றாவது அணியை உருவாக்க தீவிர முயற்சி நடந்து வருகிறது. முதல்வர்கள் சந்திரசேகரராவ், சந்திரபாபுநாயுடு, மம்தாபானர்ஜி, பட்நாயக் ஆகியோர் இதில் தீவிரம் காட்டிவருகின்றனர். லாலுபிரசாத்யாதவ், சரத்பவார், மாயாவதி, முலாயம்சிங் யாதவ், ராஜ்தாக்கரே ஆகியோரும் இந்த அணி அமைவது குறித்து தீவிரம் காட்டி வருகின்றனர்.இந்த அணியில் கம்யூனிஸ்ட் கட்சிகளையும் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்று நடவடிக்கை தொடங்கியுள்ளது. இதனால் பாஜக, காங்கிரஸ், மூன்றாவது அணி என்ற மும்முனைப்போட்டி நிலவும் சூழ்நிலை எழுந்துள்ளது. மூன்றாவது அணியில் திமுகவை சேர்த்துக்கொள்ளவேண்டும் என்று அனைத்து தலைவர்களும் விருப்பம் கொண்டுள்ளனர்.சந்திரசேகர ராவ், சந்திரபாபுநாயுடு, மம்தாபானர்ஜி ஆகியோர் திமுக செயல்தலைவரிடம் இதுகுறித்து பேசியுள்ளனர். கூட்டணியை விட்டு திமுக விலகினால் குட்டிக்கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தமிழகத்தில் தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தயாராகி வருகிறது.இந்நிலையில், மக்கள்நீதிமய்யம் கட்சியை பதிவு செய்த கையோடு காங்கிரஸ் தலைவர்கள் ராகுல்காந்தி, சோனியாகாந்தியை சந்தித்துள்ளார் நடிகர் கமலஹாசன்.இதுகுறித்து அவரளித்த பேட்டியில், சோனியா காந்தியை மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன். சந்திப்பில் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து எதுவும் விவாதிக்கப்படவில்லை. அதற்கான நேரம் இது இல்லை. தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்து விவாதித்தோம். காங்கிரஸிடமிருந்து எனக்கு அழைப்பு வரவில்லை என்று தெரிவித்தார்.கமலஹாசனுக்கு தேசிய கட்சி ஒன்றின் ஆதரவு தேவை. காங்கிரஸ்தான் அவர் முதல்தேர்வு என்று ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். தமிழக காங்கிரஸ் தலைவர்கள் இச்சந்திப்பால் புது உற்சாகம் பெற்றுள்ளனர். இச்சந்திப்பு திமுகவுக்கு போட்டுள்ள கடிவாளம் என்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here