ஆகாயத்தில் யோகா!

டெல்லி:சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்திய விமானப்படையினர் ஆகாயத்தில் யோகாசனங்கள் செய்து சாதனை படைத்தனர்.
மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று ஐ.நா. அமைப்பு 2015ல் யோகாவை அங்கீகரித்து சர்வதேச யோகா தினமாக ஜூன்21ஐ அறிவித்துள்ளது.
அதனைத்தொடர்ந்து 4வது ஆண்டாக சர்வதேச யோகா தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.
வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத்கோவிந்த், சூரிநாத் நாட்டின் அதிபருடன் சர்வதேச யோகாவிழாவில் பங்கேற்றார்.

டெஹ்ராடன் வன ஆராய்ச்சி பயிற்சி மையத்தில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.சர்வதேச யோகா தினத்தில் ராஜஸ்தான் மாநிலம் புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளது. ஜெய்ப்பூர் நகரில் உள்ள ஆர்.எ.சி மைதானத்தில் காலை 5 மணி முதல் யோகா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஒரு லட்சத்து 5 ஆயிரம் மக்கள் கலந்து கொண்டு யோகா ஆசனங்கள் , மூச்சுபயிற்சி நடத்தி காண்பித்தனர். இந்நிகழ்ச்சி கின்னஸ் சாதனையாகி உள்ளது.சர்வதேச யோகா தினத்தில் நெல்லை, அரசு விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் வாமதேவ ஆசனம் மேற்கொண்டபடி பின்னோக்கி நீந்துவது, ஏகபாத வாமதேவ ஆசனத்தை மேற்கொண்டபடி நீருக்குள் முன்னோக்கி நீந்துவது, குப்த பத்மாசனம் என 8 வகையான ஆசனங்களை பிரிஷா என்ற 4ம் வகுப்பு மாணவி மேற்கொண்டு சாதனை படைத்தார்.முப்படை வீரர்களும் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். விமானப்படை பாராட்ரூப் படைப்பிரிவை சேர்ந்த விங்க் கமாண்டர் சம்யால் விமானத்தில் இருந்து 15ஆயிரம் அடி தூரத்தில் குதித்தார். சூரிய நமஸ்காரத்தை அவர் ஆகாயத்தில் மிதந்து கொண்டே வாயு நமஸ்காரமாக செய்து சாதனை நிகழ்த்தினார். அதேபோன்று விங் கமாண்டர் கஜானந்த் என்பவர் நடுவானில் பத்மாசனம் செய்து சாதனை செய்தார்.  14ஆயிரம் அடி உயரத்தில் உறையவைக்கும் பனியில் எல்லை பாதுகாப்பு படையினர் யோகா செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here