மனிதன் மரணத்தை தேடித்தரும் ’கூகுள்’!

டெல்லி:ஒருவர் எப்போது மரணம் அடைவார் என்பதை கூகுள் துல்லியமாக கணித்துச்சொல்லும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
வாழ்க்கைப்பயணத்தில் தொடர்ந்துவரும் அனைவருக்கும் அதன் முடிவை தெரிந்துகொள்வதில் அலாதியான ஆர்வம்.தனது பிறப்பைத்தெரிந்துகொண்ட ஒருவருக்கு இறப்பைத்தெரிந்துகொள்ளும் ஆசை இருப்பது இயல்பான ஒன்று.
இந்த ஆசையை கூகுள் விரைவில் நிறைவேற்ற உள்ளது.
கூகுள் நிறுவனம் சார்பில் மருத்துவ மூளை அணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அணியினர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மரணத்தை கணிக்க உள்ளது.நோயால் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருப்பவர் எப்போது, என்ன நோயால் பாதிக்கப்பட்டார்? அவரது மருத்துவப்பரிசோதனை முடிவுகள், அவருக்கு என்ன மருந்து தரப்படுகிறது, அவரது உடல்திறன் ஆகிய தகவல்கள் பெறப்பட்டு கூகுளிடம் அளிக்கப்படுகிறது.கூகுள் செயற்கை நுண்ணறிவால் அந்நோயாளியின் இறுதிக்காலம் இப்படித்தான் இருக்கும் என்று ஆராய்ந்து கூறுகிறது.
எப்போது அவர் மரணம் அடைவார், எப்படி இறப்பார் என்றும் கூகுள் கணிக்கிறது. இது 95%சரியாகவே உள்ளது.
அதற்காக கூகுளை எமன் என்று கூறுவதற்கு முடியாது. அதன் கணக்கீட்டுத்திறன் அந்தளவுக்கு நுட்பமாகவும், சரியாகவும் உள்ளது.
இதனால் ஒருவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை மேம்படுத்தி அவரது வாழ்நாளை அதிகபட்சம் நீட்டிக்கும் வாய்ப்பு உள்ளது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here