6 வயது சிறுவனை குத்தகைக்கு கொடுத்த தந்தை!

கிருஷ்ணகிரி: காவேரி பஞ்சாப்பள்ளி கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி. இவருக்கு 6 வயதில் மூன்றாவதாக மகன் உள்ளார்.வடிவேல் பள்ளப்பட்டியைச் சேர்ந்தவர். காவேரி தனது மகனை கடந்த ஆறு மாதங்களுக்கு முன் நான்கு ஆண்டுகளுக்கு 15 ஆயிரம் ரூபாய்க்கு வடிவேலுக்கு குத்தகைக்கு கொடுத்துள்ளார்.வடிவேல் குத்தகைக்கு வாங்கிய அந்தச் சிறுவனை ஆடு மேய்க்கப் பயன்படுத்தி உள்ளார். சிறுவன் ஆடு மேய்ப்பதை பார்த்த அப்பகுதியினர் இது குறித்து குழந்தை பாதுகாப்பு அதிகாரி பிரியாவுக்குத் தெரிவித்துள்ளனர்.சம்பவ இடத்திற்கு பிரயா சென்றார். ஈடு மேய்த்து கொண்டிருந்த அந்தச் சிறுவனை மீட்டு விசாரணை மேற்கொண்டார். பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த நிலையில் 15 ஆயிரம் ரூபாய்க்குத் தந்தையே குத்தகைக்குவிட்டிருப்பது தெரியவந்தது.சிறுவனை அதிகாரிகள் மீட்டனர். தர்மபுரியில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்க அழைத்துச் சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here