செல்பி எடுத்தபோது பரிதாபம்! 900அடி பள்ளத்தாக்கில் விழுந்த பெண்!!

மும்பை:கணவருடன் சேர்ந்து செல்பி எடுக்கமுயன்ற பெண் மலை உச்சியில் இருந்து தவறிவிழுந்து இறந்தார்.
டெல்லியை சேர்ந்தவர் ராம் மோகன். தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
மனைவி சரிதா மற்றும் 3குழந்தைகளுடன் மும்பைக்கு சுற்றுலா வந்தார்.மும்பையில் இருந்து 80கி.மீ. தொலைவில் உள்ள மாதிரன் மலைப்பகுதிக்கு அவர்கள் வந்தனர்.
மலை உச்சியில் உள்ள லூசியா பாயிண்ட் பகுதியிலிருந்து சரிதாவும், ராம் மோகனும் செல்பி எடுக்க முயன்றனர்.அப்போது கால்தவறி விழுந்தார் சரிதா. 900அடி தாழ்வான பகுதியில் அவர் உடலை தேடும் பணியில் உள்ளூர் பழங்குடிமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து மாதிரன் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here