காவிரி வாரியத்தின் உத்தரவுக்கு காத்திருக்க மாட்டேன்!

பெங்களூர்:காவிரி வாரியத்தின் உத்தரவுக்காக காத்திருக்க முடியாது என்று கூறியுள்ளார் கர்நாடக முதல்வர் குமாரசாமி.
ராமநகர் மாவட்டத்தில் அனுமார் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார்.
நிருபர்களிடம் அவர் கூறுகையில்,காவிரி வாரியத்துக்கு உறுப்பினர்கள் நியமிப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம்.
காவிரி வாரியம் குறித்து மத்திய அமைச்சர்களிடம் அரசின் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளேன்.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க தொடர்ந்து பாடுபடுவேன்.
கர்நாடக மாநில விவசாயிகள் பயனடையும் வகையில் காவிரியில் நீர்திறக்க உத்தரவிட்டுள்ளேன்.
கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இதனால் மண்டியா மாவட்டத்தில் நெல்,கரும்பு விவசாயிகள் பயனடைவார்கள்.
நமது மாநில விவசாயிகள் பயனடைய தண்ணீர் திறக்க வாரியத்தின் உத்தரவு வரும்வரை காத்திருக்க முடியாது.
காவிரி வாரியத்தின் உத்தரவுப்படி, தமிழகத்துக்கு தரப்படவேண்டிய தண்ணீர் ஏற்கனவே அளித்துள்ளோம்.
இவ்வாறு குமாரசாமி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here