மதுரையில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை! 3 ஆண்டுகளுக்கு பிறகு உத்தரவு!!

மதுரை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2014-இல் பிரதமருக்கு தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் கடிதம் எழுதியிருந்தார்.பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 2015 பிப். 28ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய நிதிநிலை அறிக்கையில் பிரதான் மந்திரி ஸ்வஸ்த்ய, சுரக்சா யோஜனா திட்டத்தின் தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை நிறுவப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்தார்.தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க ஐந்து இடங்கள் தேர்வு செய்யப்பட்டு தமிழக அரசால் பரிந்துரைக்கப்பட்டன.அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மதுரையில் உள்ள தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய மத்திய அரசு அறிவித்தது. ரூ.1,500 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here