சுற்றுச்சூழல் பற்றிப் பேசினாலே தவறு என்பதா! சேலம் பசுமை வழிச்சாலை திட்டம் குறித்து கமல்ஹாசன் பேச்சு!!

டெல்லி: நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியைத் துவக்கினார். தனது கட்சிக்கு அங்கீகராம் வழங்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு மனு செய்திருந்தார்.அதற்கு தேவையான ஆவணங்களையும் தேர்தல் ஆணையத்திடம் முன்பாகவே தாக்கல் செய்திருந்தார். இது சம்பந்தமாக கமல் டெல்லி சென்றுள்ளார்.டெல்லியில் கமல் பத்திரிக்கையாளர்களிடம் பேசினார். அங்கீகாரம் தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்திக்க வந்துள்ளேன்.சேலம் பசுமை வழிச் சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் கைது செய்யப்படுவது குறித்து கமலிடம் கேள்வி கேட்டனர்.எந்தத் திட்டம் என்றாலும் சுற்றுச்சூழல் பற்றிப் பேசினாலே தவறு என்பதா? ஆர்வமும் அக்கறையும் உள்ளவர்களின் கவலைதான் இது. எனக்கும் அதே எண்ணம்தான் உள்ளது என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here