Connect with us

National

இறந்து கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கலம்! எலும்புக்கூடு அருங்காட்சியகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது!!

Published

on

மும்பை: உரண் கடற்கரையில் கடந்த சில தினங்களுக்கு முன் ராட்சத திமிங்கலம் ஒன்று செத்து கரை ஒதுங்கியது. அந்த திமிங்கலம் 43 அடி நீளம் கொண்டதாக இருந்தது.திமிலங்கத்தை உடற்கூறு ஆய்வு கடற்கரையிலேயே செய்யப்பட்டது. பின்னர் எலும்புகூட்டை தனியாக பிரித்து எடுத்தனர்.இதன்படி திமிங்கலத்தின் சதையை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் வனத்துறையினர் கடந்த 3 நாட்களாக ஈடுபட்டு இருந்தனர். சதை பகுதிகள் கடற்கரையில் புதைக்கப்பட்டன. திமிங்கலத்தின் எலும்புக்கூடு 32 அடி நீளம் கொண்டதாகவும், மண்டை ஓடு 8.2 அடி நீளம் கொண்டதாகவும் இருந்தது.கன்டெய்னர் லாரியில் எலும்புக்கூடு ஏற்றப்பட்டது. ஐரோலியில் உள்ள கடல் உயிரின மைய அருங்காட்சியகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு வேதியியல் முறையில் பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட உள்ளது.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator