ரேஷன் பொருட்கள் கொண்டு செல்லும் லாரியில் மதுபாட்டில்கள் டெலிவரி!!

கரூர்: கடவூர் ஒன்றியத்தில் உள்ள பாலவிடு, ரெட்டியப்பட்டி பகுதிகளில் தமிழக அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.டாஸ்மாக் கடைகளுக்கு மதுபாட்டிகள் சப்ளை செய்ய லாரி வந்துள்ளது. லாரியில் ரேஷன் பொருட்கள் அவசரம் என்று எழுதி மதுபாட்டில்கள் செய்துள்ளனர்.ரெட்டியப்பட்டி சேர்ந்த புள்ளி ராமமூர்த்தி என்பவர் சாலையோரம் நின்ற ரேஷன் பொருட்கள் அவசரம் என்ற லாரியை பார்த்திருக்கிறார். லாரியில் மதுபான பாட்டில்கள் அடங்கிய பெட்டிகள் அடுக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளானார். இது குறித்து லாரி ஓட்டுனரிடம் விசாரித்துள்ளார்.கான்ட்ராக்டர் பாலு தங்களை இந்த லாரியில் மதுபாட்டில்களை டெலிவரி செய்ய அனுப்பியதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here