மன அழுத்தம் பார்வையை பாதிக்கும்!

லண்டன்: லண்டனில் வெளியாகும் ஐரோப்பிய மருத்துவ ஆய்விதழ் ஈபிஎம்ஏ ஜர்னலில் இதுதொடர்பான கட்டுரை வெளியாகி உள்ளது. ஜெர்மனியில் உள்ள கியூரிக் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டாக்டர் பெர்ன்ஹர்ட்.இவர் மன அழுத்தத்துக்கும் பார்வைக்குறைபாடுகளுக்கும் உள்ள தொடர்பை ஆராய்ச்சி செய்து கண்டறிந்துள்ளார். மன அழுத்தம் தலையில் உள்ள நரம்புகளை பாதிக்கிறது. அவை முறுக்கேற்றப்பட்டு உஷ்ணம் அதிகரிக்கிறது. இதனால் தலைக்கு ரத்தம் சீராக செல்வதில் பாதிப்பு ஏற்படுகிறது.கண், மூளை நரம்புகளில் உள்ள செல்லடுக்குகளின் வேலை இதனால் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இது பார்வைக்குறைபாடுகளை ஏற்படுத்துகிறது. மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 70சதவீதத்துக்கும் மேலானவர்களுக்கு தலைவலி ஏற்படுகிறது.இதற்கு முக்கிய காரணமாக இருப்பது பார்வை நரம்புகள் பாதிக்கப்படுவது என்று ஆராய்ச்சியில் தெரிவித்துள்ளார் டாக்டர் பெர்ன்ஹட்.ஐரோப்பிய கண் ஆராய்ச்சி மருத்துவம் டாக்டர் பெர்ன்ஹட்டின் அறிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளது. கண் பாதிப்புக்காக சிகிச்சை அளிப்போருக்கு மன அழுத்தம் நீக்க துணை சிகிச்சை தரப்படும் என்று தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here