புழல் சிறையில் கைதி கொடூர கொலை!

சென்னை: ரவுடி பாக்ஸர் முரளி சென்னையை சேர்ந்தவர். இவர் மீது கொலை, கொள்ளை, கொலை முயற்சி உட்பட பல வழக்குகள் உள்ளன.போலீசார் பாக்ஸர் முரளியை குண்டர் சட்டத்தில் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.முரளியை சிறையில் உள்ள கழிவறையில் 5 பேர் கொண்ட கும்பல் கழுத்து உள்ளிட்ட பல இடங்களில் கொடூரமாக வெட்டியுள்ளனர்.போலீசார் முரளியை மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். முரளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். புழல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here