பன்றி தாக்கி சிறுவன் படுகாயம்!!

பாகல்கோட்டை: பன்றி தாக்கியதில் மூன்று வயது சிறுவன் படுகாயமடைந்து உயிருக்கு போராடி வருகிறான்.
பாகல்கோட்டை அருகே ஊடிகிராமத்தை சேர்ந்த சேகர் என்பவர் மகன் சந்திரா பாலிகர்(3).நேற்று பெற்றோர் வேலைக்கு சென்றிருந்ததால் பாட்டியின் வீட்டில் இருந்தான்.
அப்பகுதியில் பன்றிகள் அடிக்கடி சுற்றிவந்து தொந்தரவு தந்தன.

வீட்டுக்குள் திடீரென்று நுழைந்த பன்றிகள் சந்திராவை கடித்து குதறின.
குழந்தையின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குள் நுழைந்தனர். பன்றிகளை விரட்டி சிறுவனை காப்பாற்றினர்.
சிறுவன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். அவனது கண் பகுதியில் பலத்தகாயம் ஏற்பட்டுள்ளது. தீவிர சிகிச்சைபெற்றுவருகிறான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here