பிக்பாஸ் வீட்டில் பிக் பைட்!

சென்னை:பிக்பாஸ் வீட்டில் பங்கேற்பாளர்களுக்கு இடையே சண்டை வெடித்துள்ளது.
பிக்பாஸ் வீட்டில் 16+1 பங்கேற்பாளர்கள் இடம்பெற்றுள்ளார்.
முதல்வாரத்தின் லீடராக ஜனனி பங்கேற்றுள்ளார்.சமையல் வேலைக்காக மும்தாஜ் தலைமையிலான டீம் அமைத்துள்ளார்.
அந்த டீம் சமையலை சரிவர செய்யவில்லை. இதனால் ‘வெங்காயத்தில்’சண்டை துவங்குகிறது.
அந்த சமையலை பாலாஜி விமர்சிக்கிறார். சமையல் செய்தவர் அவர் மனைவி என்று தெரியவருகிறது.இதனால், மனைவியையும், அவருக்கும் தனக்கும் இடையே இம்சை நாயகியாய் வருபவரை சாக்கடை என்று திட்டுகிறார் பாலாஜி.
இதற்கிடையே சமையல் பணிகளை சரிவர ஒருங்கிணைக்காத மும்தாஜை கடிந்து கொள்கிறார் ஜனனி.
அதற்கு மும்தாஜ் பதில் கூறும்நேரத்தில் ஜனனி நடுவே பேசுகிறார்.அதனை கண்டிக்கிறார் மும்தாஜ். நான் பேசும்போது லீடரே ஆனாலும் கேட்டுக்கொண்டிருக்கத்தான் வேண்டும் என்று ரூல்ஸ் போடுகிறார்.
பாலாஜி-நித்யா, மும்தாஜ்-ஜனனி என்று சண்டை வெடித்து பிக்பாஸை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here