Connect with us

National

கட்சியை பதிவு செய்தார்! கூட்டணியை உறுதி செய்தார்!!

Published

on

டெல்லி: மக்கள் நீதிமய்யம் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த கமல் அடுத்த கட்ட அரசியல் நிகழ்வை நடத்தியுள்ளார்.
ஆம். தேசிய கட்சியான காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன்,
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். டெல்லியில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
பின்னர், கமல் நிருபர்களிடம் கூறுகையில், ராகுலுடன் அரசியல் குறித்து பேசினேன்.
ஆனால் கூட்டணி தொடர்பாக பேசவில்லை என்றார்.ராகுல் காந்தி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- “ கமல்ஹாசனுடனான சந்திப்பு சிறப்பாக இருந்தது. எங்கள் இரு கட்சிகள் தொடர்பாக விரிவாக இருவரும் ஆலோசனை நடத்தினோம்.
தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் கமல்ஹாசனிடம் ஆலோசனை செய்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
வியாழக்கிழமை சோனியாகாந்தியையும் கமல் சந்தித்து பேசவுள்ளார் கமல்.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator