டிஜிட்டல் இந்தியாவில் இப்படி ஒரு சோகம்!!

சான்பிரான்சிஸ்கோ: இந்தியாவில் டிஜிட்டல் சேவை அனைத்து துறைகளிலும் முன்னிறுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் இணையத்தை பயன்படுத்துவோர் 25% இளைஞர்கள் மட்டுமே என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் பிஈடபிள்யூ ஆராய்ச்சி மையம் ஆண்டுதோறும் இணையப்பயன்பாடு குறித்து ஆராய்ச்சி செய்துவருகிறது. 2017ம் ஆண்டின் ஆராய்ச்சி முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.அதில், இந்தியாவில் உள்ள இளைஞர்களில் 4ல் ஒருவர்தான் இணையத்தை பயன்படுத்தி வருகிறார் என்று தெரியவந்துள்ளது. அதேநேரம், ஸ்மார்ட்போன்களை பயன்படுத்திவருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2012ல் 12சதவீதம் இளைஞர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்தினர். 22சதவீதமாகி உள்ளது.ஸ்மார்ட்போன்களில் சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. 2012ல் 8சதவீதம்பேரையே சமூக ஊடகங்கள் சென்றடைந்திருந்தன. தற்போது அது 20சதவீதமாகி உள்ளது.இருந்தபோதும் 78%இளையோருக்கு பேஸ்புக்கும், 80%இளையோருக்கு டுவிட்டரும் எட்டாத விஷயமாகத்தான் இன்னமும் உள்ளது. இணையத்துக்கும் இளையோருக்குமான இடைவெளி ஆப்ரிக்க நாடுகளில் உள்ளதைப்போன்றுதான் இந்தியாவிலும் உள்ளது என்று அறிக்கை தெரிவிக்கிறது.ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களில் முதலிடம் வட அமெரிக்க இளைஞர்கள். இவர்களைத்தொடர்ந்து அதிகம் இளையோர் ஐரோப்பாவில் ஸ்மார்ட்போன், இணையம் என்று வளைய வருகின்றனர்.ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, ஸ்வீடன், கனடாவிலும் பத்துக்கு ஒன்பது பேர் ’ஸ்மார்ட்தானாம்’.அமெரிக்காவில் பேஸ்புக், டுவிட்டர் கணக்கு வைத்திருப்போர் அதிகம் என்றபோதும் அவர்கள் அதிகநேரம் செலவிடுவது ஸ்நாப்சாட்,
இன்ஸ்டாகிராம் என்பது கவனிக்கத்தக்க விஷயம் ஆகும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here