Connect with us

National

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி அமல்!

Published

on

ஜம்மு காஷ்மீர்: பிடிபி – பாஜக கூட்டணி ஆட்சி மெகபூபா முப்தி தலைமையில் ஜம்மு காஷ்மீர் நடந்து வந்தது. ஆளும் கூட்டணி கட்சிகளுக்குள் கருத்து மோதல் இருந்து வந்தது.பா.ஜ.க. தலைவர் அமித் ஷா நேற்று எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்னார். பின்னர் மெகபூபா முப்தி தலைமையிலான கூட்டணி அரசில் இருந்து விலகுவதாக பா.ஜ.க. அறிவித்தது.இந்த அறிவிப்புக்கு பின்னர் தனது முதல் மந்திரி பதவியை மெகபூபா முப்தி உடனடியாக ராஜினாமா செய்தார். பா.ஜ.க ஆட்சியமைக்க போவதில்லை என அறிவித்து விட்டது.புதிய அரசு அமையும் சூழ்நிலை ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இல்லை. கவர்னர் ஆட்சியை அமல்படுத்த அனுமதிக்குமாறு ஜனாதிபதி மாளிகைக்கு கவர்னர் வோரா பரிந்துரை கடிதம் அனுப்பினார்.பரிந்துரையை ஏற்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த ஒப்புதல் அளித்தார். இன்று முதல் ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator