பொருளாதார ஆலோசகர் பதவி விலகினார்! அடிப்படைவாதிகள் கொண்டாட்டம்!!

டெல்லி: மத்திய அரசின் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம் பதவி விலகி உள்ளார். பொருளாதார அணியின் இரண்டாவது விக்கெட் வீழ்த்தப்பட்டது என்று அடிப்படைவாத அமைப்பை சேர்ந்தவர்கள் மகிழ்ந்துள்ளனர். 2014ம் ஆண்டில் அரவிந்த் சுப்பிரமணியம் ஆலோசகர் பதவியேற்றார்.கடந்த ஆண்டு அவர் பதவிக்காலம் நிறைவுபெற்றது. அடுத்த ஓராண்டு பதவிநீட்டிப்பும் பெற்றார். இந்நிலையில், அவர் பொறுப்பில் இருந்து விடுவித்துக்கொள்ள விரும்பினார்.
சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சைசெய்து வீட்டில் ஓய்வில் இருக்கும் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லியிடம் அவர் கோரிக்கை விடுத்தார்.அதனை ஏற்றுக்கொள்வதாக அருண்ஜெட்லி அறிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி ஆளுநராக பணியாற்றிய ரகுராம்ராஜன், அரவிந்த் சுப்பிரமணியம் ஆகியோர் ஒன்றாக படித்தவர்கள்.இருவருமே சந்தை பொருளாதாரத்தில் நிபுணர்கள்.அரசியல்வாதிகளிடம் நீண்ட இடைவெளியை பேணும் இவர்களை அடிப்படைவாத அமைப்பை சேர்ந்தவர்களால் விமர்சிக்கப்பட்டு வந்தனர்.இதனால், ரகுராம்ராஜன், அரவிந்த் சுப்பிரமணியம் இருவரும் கனத்த இதயத்துடன் இந்திய அரசு பணியில் இருந்து விலகியுள்ளனர். அரவிந்த் சுப்பிரமணியம் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்ற உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here