உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது! துப்பாக்கி லைசன்ஸ் வேண்டும்!!

ராஞ்சி:தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று தோனியின் மனைவி சாக்‌ஷி கேட்டுக்கொண்டுள்ளார்.இதுதொடர்பாக காவல்துறை அதிகாரிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
கிரிக்கெட் வீரர் தோனிக்கு ’ஒய்’பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அவர் வீட்டிற்கு ஆண்டுமுழுவதும் போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. இந்நிலையில், சாக்‌ஷி காவல்துறைக்கு எழுதியுள்ள கடிதத்தில், தனது கணவர் அடிக்கடி வெளியூர்பயணம் செல்கிறார். வீட்டில் தனியாக இருக்க வேண்டியுள்ளது. வெளியிடங்களுக்கும் தனியாகவே செல்ல வேண்டியுள்ளது.
இதனால் எனது உயிருக்கு அச்சுறுத்தல் எழுந்துள்ளது. பாதுகாப்புக்காக கைத்துப்பாக்கி என்னுடன் வைத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும். இவ்வாறு சாக்‌ஷி கேட்டுக்கொண்டுள்ளார்.
2008ல் தோனி துப்பாக்கி லைசன்ஸ் கேட்டு விண்ணப்பித்தார். அவ்விண்ணப்பம் மறுக்கப்பட்டது. 2010ல் மீண் டும் விண்ணப்பித்து லைசென்ஸ் பெற்றுக்கொண்டார்.கடந்த ஆண்டு கொல்கத்தாவில் இந்திய – ஆஸி. அணிகளுக்கு இடையே கிரிக்கெட்போட்டி நடந்தது.
அதில் பங்கேற்க சென்ற தோனி போலீஸ் பயிற்சிமையத்துக்கு விசிட் செய்தார்.
அங்கு குறிபார்த்துச்சுடும் தனது திறமையை வெளிப்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here