காங்கிரஸ் அமைச்சர் மீது ஹவாலா மோசடி வழக்கு!

பெங்களூர்: ஹவாலா பணமோசடி வழக்கில் சிக்கியுள்ளார் கர்நாடக காங்கிரஸ் அமைச்சர் டி.கே.சிவக்குமார்.
கர்நாடகாவில் காங்கிரஸ்-மஜத கூட்டணி அமைய தளபதியாக பணியாற்றி உதவியவர் சிவக்குமார்.இரு கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களையும் ஒருங்கிணைத்து ரிசார்ட், நட்சத்திர ஓட்டல் என்று தங்கவைத்தார்.
எஸ்கேப் ஆன இரு எம்.எல்.ஏ.க்களையும் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அவைக்கு அழைத்துவந்தார்.
பேரவை தேர்தலுக்கு முன்பே அவருக்கு சொந்தமான இடங்களில் வருமானவரி சோதனை நடைபெற்றது.இந்நிலையில் டெல்லியில் ப்ளாட் ஒன்றில் நடந்த சோதனையில் டைரி ஒன்று சிக்கியது. ரூ.6கோடியும் பிடிபட்டது.
காங்கிரஸ் பிரமுகர் சுரேஷ்ஷர்மாவுக்கு சொந்தமான அந்த ப்ளாட்டில் சிவக்குமார் டெல்லி சென்றால் தங்குவது வழக்கம்.
அங்கு கிடைத்த டைரியில் காங்கிரஸ் கட்சிக்கும், முக்கிய பிரமுகர்களுக்கும் பணப்பட்டுவாடா நடந்த விபரங்கள் இருந்தன.அதில் ரூ.10நோட்டு என்று ’க்ளூ’ தரப்பட்டுள்ளது. ஹவாலா பரிவர்த்தனையில் பொதுவாக பத்துரூபாய் நோட்டுக்கள்
புழங்குவது வழக்கம்.
ஒருவருக்கு பணம் தேவைஎனில் பத்து ரூபாயை முன்பின் படமெடுத்து பணம் தரும் நபருக்கு அனுப்பி வைக்கிறார்களாம். அதே எண்கள் உடைய பத்துரூபாயை எடுத்துவரும் நபரிடம் தேவையான ஹவாலா பணம் தரப்படுகிறது.டைரியில் கிடைத்த பல சீக்ரெட் வார்த்தைகள் ஹவாலா பரிவர்த்தனையில் இருப்பதை போன்று உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே, முறைகேடான பணப்பரிவர்த்தனை சட்டத்தின்கீழ் சிவக்குமார், உதவியாளர் ஆஞ்சனேயா மேலும் 3பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் ஆகஸ்ட்3ம் தேதி விசாரணைக்கு ஆஜராக நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here